"உலக நாடுகளுக்கு சீனா பெரிய சேதத்தை விளைவித்துள்ளது" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக நாடுகளுக்கு சீனா பெரிய சேதத்தை விளைவித்துள்ளது - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து
x
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, 30 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால், இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியான நிலையில், அதிபர் டிரம்ப் இவ்வாறு டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே ஹைட்ராக்சிகுளோரோகுயின், மாத்திரைகள், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பெருமளவு உதவியதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹென்றி ஃபோர்ட் சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த மாத்திரைகளால், கொரோனா உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்