எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
x
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரு தரப்பும்  படைகளை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள்  நடைபெறாமல் இருக்கவும் இரு தரப்பிலும் உறுதி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பிலும் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்