கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உலக நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தியுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உலக நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தியுள்ளன. தளர்வுகளுக்கு பின்பு உலக நாடுகளின் பாதிப்பு நிலவரம்.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி , உலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை கடந்துள்ளது. 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில் , உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. அதிக பாதிப்புக்குள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
இங்கிலாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அந்நாட்டில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கடந்த 5 நாட்களாக 200க்கும் குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. புதிய பாதிப்பு சதவீதம் மற்றும் உயிரிழப்பு சதவீதம் குறைந்துள்ளதால் அந்நாட்டில் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 13ம் தேதி அன்று 83 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறைவான எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் அதிகரித்தால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 11 நாட்களாக தினம்தோறும் 10 ஆயிரம் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் ரஷ்யா கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது
இந்தியா கொரோனா பாதிப்பு பட்டியலில் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Next Story

