"இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்" - யூனிசெஃப்

இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று குழந்தைகள் நிதி அமைப்பான யூனிசெஃப் அறிவித்துள்ளது.
x
கொரோனா வைரசால், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் உலகமெங்கும் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 

* இதனால், உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என யூனிசெஃப் தெரிவித்துள்ளது. 

* இந்தியாவை பொறுத்தவரை, கடந்த மார்ச் 11-ந் தேதிக்கு பின்னர் 9 மாதங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

* மார்ச் 11-ந் தேதி தொடங்கி டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்றும் யூனிசெஃப் அமைப்பு கணித்துள்ளது. 

இதே போன்று கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனாவில் 1 கோடியே 35 லட்சம் குழந்தைகளும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், 

* பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என்று யூனிசெஃப் கூறி உள்ளது. 

* அமெரிக்காவில் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையிலான காலத்தில், 32 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என யூனிசெப் கணித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்