சிங்கப்பூரில் தொழிலாளர்களுக்கு பிரத்யேக விடுதி ஏற்பாடு - கடற்பரப்பில் விடுதிகளை ஏற்படுத்தும் சிங்கப்பூர்

கொரோனா தொற்றுள்ள தொழிலாளர்களை தங்க வைக்க, சிங்கப்பூர் அரசு, மிதக்கும் விடுதிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
சிங்கப்பூரில் தொழிலாளர்களுக்கு பிரத்யேக விடுதி ஏற்பாடு - கடற்பரப்பில் விடுதிகளை ஏற்படுத்தும் சிங்கப்பூர்
x
சிங்கப்பூர் நாட்டில் இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், ஆயிரத்து 900 பேர் சிகிச்சையில் உள்ளனர். வேலைக்கு வந்துள்ள வெளிநாட்டினருக்கும் தொற்று உள்ளது. அவர்கள் தங்கியுள்ள விடுதிகள் கொரோனா தொற்று பரவ ஆதாரமாக இருப்பதாக கூறும் அந்நாட்டு அரசு, ராணுவ முகாம், பொது நல மையம், கண்காட்சி மையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொழிலாளர்களை மாற்றி வருகிறது. அங்கு, பாதுகாப்பாக தங்க வைப்பதோடு, கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும், அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் கா பூன்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தாஞ்ஜூங் பகார் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விடுதியை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்களை கடலின் மேல்பரப்பில் தங்க வைக்க தீவிர ஏற்பாடு, சிங்கப்பூர் அரசு செய்துவருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்