இத்தாலியில் அதிகரிக்கும் உயிர் பலிகள் - சீனா-இத்தாலி இடையே உள்ள தொடர்பு என்ன?

கொரோனா வைரஸ் இத்தாலியை தலை கீழாக புரட்டி போட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து இத்தாலியை கொரோனா சின்னா பின்னமாக்கியதன் காரணம் என்ன....
இத்தாலியில் அதிகரிக்கும் உயிர் பலிகள் - சீனா-இத்தாலி இடையே உள்ள தொடர்பு என்ன?
x
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை எட்டாயிரத்தை நெருங்குகிறது. கொரோனவின் கோர தாண்டவத்தால் இத்தாலி மக்களின் வாழ்வாதாரமே முடங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பால் சீனா முதன்முதலாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை இத்தாலி மிஞ்சி உள்ளது.

இத்தாலியின் கொரோனா பலிக்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன

இத்தாலியில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 60சதவிகிதம் பேர் நாற்பது வயதை கடந்தவர்கள் என்றும் இவர்களில் 23 சதவிகிதத்தினர் 60 வயதை கடந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரழப்பு வரை கொண்டு சென்றுள்ளது.

மற்றொன்று இத்தாலியின் நவனாகரீக ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலைகள். இந்த இரண்டுமே தற்போது இத்தாலியின் கொரோனா பலிக்கு காரணமாக கூறப்படுகிறது.


இத்தாலியில் மட்டும் சுமார் மூன்றாயிரம் தொழிற்சாலைகளை சீனா துவக்கி உள்ளது.
இத்தாலி தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 10 லட்சம் சீன தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊகானை சேர்ந்தவர்கள்.
இத்தாலிக்கும் ஊகானுக்கும் நேரடி விமான சேவை இருந்தது.
சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட சமயத்தில் ஊகானில் இருந்து இத்தாலிக்கும் இத்தாலியில் இருந்து ஊகானுக்கும் பலரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து தாமதமாக உணர்ந்து கொண்ட இத்தாலி அரசு தற்போது அதற்கான விலையை கொடுத்து வருகிறது.இதன் விளைவு கடந்த 17ஆம் தேதி இரண்டாயிரதிற்கும் அதிகமானோரை கொரோனாவிற்க்கு பலி கொடுத்து சீனாவையே மிஞ்சி உள்ளது இத்தாலி.

காலம் கடந்து உண்மையை உணர்ந்த இத்தாலி தற்போது தான் தங்கள் மக்களை தனிமை படுத்தும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்