வீடுகளுக்குள் முடங்கிய அமெரிக்கர்கள் - புதிய திரைப்படங்களை வெளியிட பட நிறுவனம் முடிவு

கொரோனா அச்சுறுத்தலால் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
வீடுகளுக்குள் முடங்கிய அமெரிக்கர்கள் - புதிய திரைப்படங்களை வெளியிட பட நிறுவனம் முடிவு
x
கொரோனா அச்சுறுத்தலால், அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில், வீடுகளுக்கே நேரிடையாக, புதிய திரைப்படங்களை ஒளிப்பரப்பும் திட்டத்தை யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் படி, வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி, வெளியாக உள்ள அனிமேஷன் திரைப்படம் "Trolls World Tour",  "The Hunt," "The Invisible Man" and "Emma" ஆகிய திரைப்படங்களை, ஆன் டிமாண்ட் சர்வீஸ் மூலம், வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியுள்ள அமெரிக்கர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்