கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயர்த்திய சவுதி அரேபியா - உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக சவுதி அறிவிப்பு

கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி அரேபியா தற்போது உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையை மீண்டும் உயர்த்திய சவுதி அரேபியா - உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக சவுதி அறிவிப்பு
x
கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த சவுதி அரேபியா, தற்போது உற்பத்தியை அதிகரிக்க  உள்ளதாக கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து  உற்பத்தியை குறைக்க, எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்தன. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால், சந்தையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா அதிரடியாக குறைத்தது. இதையடுத்து 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 35 டாலருக்கு கீழே வர்த்தகமானது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா மீண்டும் உயர்த்தி உள்ளதுடன், உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்