கொரோனா பாதிப்பு: எகிப்தில் சிக்கி தவிக்கும் 17 தமிழர்கள் - தமிழக அரசு உதவி செய்ய வலியுறுத்தல்

எகிப்துக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 17 பேர் நைல் நதியில், கப்பலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு: எகிப்தில் சிக்கி தவிக்கும் 17 தமிழர்கள் - தமிழக அரசு உதவி செய்ய வலியுறுத்தல்
x
கோவை மாவட்டம் , கிணத்துக்கடவை சேர்ந்த வனிதா ரங்கராஜ் உட்பட 17 பேர் கடந்த மாதம் 27-ந் தேதி எகிப்து நாட்டுக்கு 10 நாள் சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு , அவர்கள் கடந்த 5ம் தேதி நைல் நதிக்கு கப்பலில் பயணம் செய்தனர். அப்போது கப்பலில் உடன் பயணித்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக கப்பலை நைல் நதியிலேயே நிறுத்தி வைக்க எகிப்து அரசு உத்தரவிட்டது. கப்பலில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்