"உலகம் முழுவதும் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ்" - கொரோனாவால் 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் - கொரோனாவால் 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழப்பு
x
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா, உலகையை உலுக்கி வருகிறது.  இந்த வைரஸ் தாக்குதலால், 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பல நாடுகளிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. பாகிஸ்தானில் 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  ஈரானில் இருந்து வந்தவருக்கு, நோய் தொற்று இருந்ததாக கூறியுள்ளார். பிரான்சில் கொரோனாவால் இராண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதேபோல், பிரேசிலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்ததுள்ளது. ஜார்ஜாவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்