கொரோனா வைரஸ் தாக்கம் - தொழில்துறை பாதிப்பு : சர்வதேச பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவை கண்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் - தொழில்துறை பாதிப்பு : சர்வதேச பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு
x
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவை கண்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், அமெரிக்காவின் 'டவ்ஜோன்ஸ்' பங்குச் சந்தை ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. 'நாஸ்டாக்' சந்தை 3 புள்ளி 71 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இத்தாலி, ஈரான் நாடுகளுக்கும் கொரோனா பரவியுள்ளதால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் பங்குச் சந்தைககள் கடந்த சில நாட்களாகவே சரிந்து வருகிறது. நாடுகளிடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புதிய முதலீடுகள் திரட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தொழில்துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்