தன் மகளை தொடாமல் தூரத்தில் இருந்து தழுவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் செவிலியர் - சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ

சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவர் தனது மகளை தொடாமல் தூரத்தில் இருந்தபடியே ஆரத்தழுவும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தன் மகளை தொடாமல் தூரத்தில் இருந்து தழுவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் செவிலியர் - சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ
x
சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவர் தனது மகளை தொடாமல் தூரத்தில் இருந்தபடியே ஆரத்தழுவும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரை காண வந்த மகள் தூரத்தில் நின்றபடி கண்ணீருடன் அம்மா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்கிறார். அதற்கு செவிலியரான தாய் அரக்கன்களுக்கு எதிராக தாம் போராடி வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவேன் என்றும் மகளுக்கு ஆறுதல் கூறி தூரத்தில் இருந்தவாறே ஆரத்தழுவுகிறார். இந்த நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்