வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக்கொலை

தாய்லாந்து வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ராணவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக்கொலை
x
தாய்லாந்து வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ராணவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். நாகோன் ராட்சாசிமா நகரில் உள்ள பிரமாண்ட வணிகவளாகத்திற்குள் சென்ற ராணுவ வீரர் ஒருவர், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர், அந்த வணிக வளாகத்தை முற்றுகையிட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுட்டுக்கொலை செய்தனர்.  துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 32 வயதான, சிப்பாய் ஜக்ரபந்த் தோம்மா என, அடையாளம் கண்டுள்ளதாக, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்