உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - அழிவின் நகரமாகும் சீனாவின் வுஹான்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரத்தில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், இப்படி அறிவிக்கப்படும் 6 வது முறை என்கிற தகவல்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - அழிவின் நகரமாகும் சீனாவின் வுஹான்
x
மத்திய சீனாவில் உள்ள அழகான நகரங்களில் ஒன்றுதான் வுஹான். ஹுபெய் மாகாணத்தின் தலைநகரம். 

இந்த நகரத்தில்  இருந்துதான் முதன் முதலில் கொரோனோ வைரஸ்  கண்டறியப்பட்டது.  இங்கிருந்துதான் உலகம் முழுவதும் பரவியது என்பதால் இந்த நகரத்தை இப்போது மக்கள் வெறுக்கத் தொடங்கி உள்ளனர்.

உலகின் 3 வது மிகப்பெரிய நதியான யாங்சே நதியின் கரையில், அமைந்துள்ளதால், அழகான ஏரிகள், மனதை மயக்கும் பூங்கா என ரம்மியமான நகரம் என்றால் மிகையில்லை. 

ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதால், விவசாயமும்,  தொழிலும் செழித்து நிற்கும் இந்த நகரம் இன்று உலக அபாயத்தின் குறியீடாக அச்சுறுத்தி வருகிறது.

தற்போது நகரத்தின் அனைத்து போக்குவரத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நகரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 6 முறை உலக சுகாதார அவசர நிலை அமல்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் பன்றி காய்ச்சல் என்கிற ஸ்வைன் புளூ,  2014 ஆம் ஆண்டில் போலியோ, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் எபோலா, 2016 ஆம் ஆண்டில் ஸிகா வைரஸ், 2020 ஆம் ஆண்டில் கோரோனா வைரஸ் தாக்குதல்களால் நகரம் நிலை குலைந்துள்ளது.

எபோலா வைரஸ் 9  நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், ஸிகா 29 நாடுகள், பன்றிக் காய்ச்சல் 214 நாடுகளில் கடும் அழிவுகளை கொண்டு வந்துள்ளது.  அந்த வரிசையில் தற்போது கோரோனா 28 நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை கொண்டு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். ஸிகாவில் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 774 ஆக உள்ளது. 

எபோலா பாதிப்பு கண்டறியப்பட்ட நாளில் இருந்து , 13 ஆயிரத்து 562 பேரும், தற்போதைய கொரோனா வைரஸ் தாக்குதலில் 565 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 550 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், உலக சுகாதார நிறுவனம் வுஹான் நகரில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. அழகான நகரத்துக்கு பின்னால், இப்படியான ஆபத்து உள்ளதை மக்கள் அச்சத்துடன் கவனித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்