அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் விடுவிப்பு - செனட் சபை அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக, எழுந்த புகார் மீதான விசாரணையிலிருந்து, செனட் சபை விடுவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் விடுவிப்பு - செனட் சபை அறிவிப்பு
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக, எழுந்த புகார் மீதான விசாரணையிலிருந்து, செனட் சபை விடுவித்துள்ளது. முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என, உக்ரைன் நாட்டு அரசுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரில், பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறிய நிலையில், செனட் சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவில், டிரம்ப்பை விடுவிக்க 52 பேரும், விடுவிக்க கூடாது என 48 பேரும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம், பதவி நீக்கத் தீர்மானத்தில்  இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, செனட் சபை அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்