அண்டை நாடுகளையும் தாக்கும் கொரோனா - கொரோனா வைரசால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்கும் பரவி வருகிறது. இதேபோல் அண்டை நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் உள்ள சர்வதேச கடல் உணவு சந்தையில், சட்டவிரோதமாக விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியிலிருந்து கொரோனா என்ற உயிர் கொல்லி வைரஸ் பரவியது. சுவாசம் மூலம் பரவும் இந்த வைரஸ் தாக்கி, இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஹூபேய் மாகாணத்தில் 13 நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
ஹூபேய் மாகாணத்தை தொடர்ந்து, இந்த வைரஸ், பெய்ஜிங், ஷாங்காய், தெற்கு குன்டோங் உள்ளிட்ட மாகாணங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்தியாவில் ஒரு சிலருக்கு பாதிப்பு இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதனிடையே இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தைவான், தாய்லாந்திற்கும் பரவும் அபாயம் உள்ளது.
இதை தொடர்ந்து, தங்களது நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு நாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
Next Story

