பேப்பர், நீராவி, கிராபைட் உதவியுடன் மின்சாரம் தயாரிப்பு - பிரேசில் பல்கலைக் கழக மாணவி கண்டுபிடிப்பு

பேப்பர், கிராபைம் மற்றும் நீராவியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை பிரேசிலை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் கண்டறிந்துள்ளார்.
பேப்பர், நீராவி, கிராபைட் உதவியுடன் மின்சாரம் தயாரிப்பு - பிரேசில் பல்கலைக் கழக மாணவி கண்டுபிடிப்பு
x
 பேப்பர், கிராபைம் மற்றும் நீராவியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை பிரேசிலை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் கண்டறிந்துள்ளார். இவை மூன்றையும் சேர்த்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார் 22 வயதான மாணவி Kelly Moreira. கிராபைட் பூசப்ப​ட்ட 20 பேப்பர்களை ஒன்று சேர்த்தால் 60 எல்.இ.டி. பல்புகளை எரிய செய்ய முடியும் என்றும், இந்த எரிசக்தியை உருவாக்க இந்திய மதிப்பில் 2 ரூபாய் 30 காசுகள்  மட்டுமே செலவாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆரம்ப நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் இது குறைந்த செலவில் மின்சக்தியை உற்பத்தி செய்ய உதவும் என அந்த மாணவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்