'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் : பிரதமர் மோடிக்கு பின் கலந்து கொள்ளும் 2 வது இந்தியர்

ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சி புதிய சகாப்தம் படைக்கும் என அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் குறிப்பிட்டுள்ளார்
மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் : பிரதமர் மோடிக்கு பின் கலந்து கொள்ளும் 2 வது இந்தியர்
x
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  மேன் வெர்சஸ் வைல்டு சாகச நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம்  பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்றது.  இந்த நிலையில், ரஜினிகாந்துடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பியர் கிரில்ஸ், ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி புதிய சகாப்தம் படைக்கும் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டில், இந்த சாகச நிகழ்ச்சியில், பிரதமர்  மோடி கலந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்