வெளிநாட்டு வங்கியில் விஜய் மல்லையா கடன் பாக்கி : சொகுசுப் படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கியில் விஜய் மல்லையா கடன் பாக்கி : சொகுசுப் படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு
x
வெளிநாட்டு வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கத்தார் தேசிய வங்கி தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் நிறுவனமான "போர்ஸ் இந்தியா" கத்தார் தேசிய வங்கியில் சுமார் 47 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. அந்த கடனுக்கு பாதுகாப்பாகவும், தனிப்பட்ட உத்தரவாதமும் விஜய் மல்லையா அளித்துள்ளார். இதன் பாக்கி தொகைக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்று அந்த பணத்தை கத்தார் தேசிய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்