குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஐரோப்பிய யூனியனில் வரைவு தீர்மானம்?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஐரோப்பிய யூனியனில் வரைவு தீர்மானம்?
x
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் 150-க்கும் மேற்பட்டோர் 5 பக்க தீர்மானம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அடுத்த வாரம், பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காக குடியுரிமை திருத்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,  ஐரோப்பிய யூனியன் தலையிட்டு மனித உரிமைகளை காப்பதுடன், இந்த சட்டத்தை நிறுத்திவைக்க செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் சிலர் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த தீர்மானத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்