3 மாதங்களை கடந்து நீடிக்கும் புதர் தீ - மோசமான இழப்புகளை சந்தித்து வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காத புதர் தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் சமூகத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
3 மாதங்களை கடந்து நீடிக்கும் புதர் தீ - மோசமான இழப்புகளை சந்தித்து வரும் ஆஸ்திரேலியா
x
ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களாக நீடிக்கும் புதர் தீயால் மோசமான இழப்புகளை சந்திப்பது  மக்கள் மட்டுமல்ல உயிரினங்களும் கூட.

கோலா, கங்காரு, ஈமு என தனித்துவமான உயிரினங்களுக்கு 
பெயர்போன ஆஸ்திரேலியாவில் புதர் தீக்கு இதுவரை ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்  வெளிவந்துள்ளது...

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாகணங்களில் நான்கு மாதங்களாக நீடிக்கும் காட்டுத்தீயால் வானம் செந்நிறத்தில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது... ஆங்காங்கே வீடுகளோ எலும்பு கூடுகளாக மாறி போயுள்ளன.

வறண்ட வானிலை காரணமாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை 45 டிகிரி செல்ஸியஸை தாண்டியுள்ளது.

குறிப்பாக யூக்கலிப்டஸ் இலைகளை உணவாக உட்கொண்டு வாழும்  கோலா கரடி இனங்கள் பொதுவாக தண்ணீர் பருகுவதில்லை என்றும் கூறப்படுவதுண்டு.

ஆனால் இன்று அவை குழந்தைகள் போல் பாட்டில்களை பிடித்து தாகத்தை தணிக்க தண்ணீருக்காக மனிதர்களிடம் கெஞ்சும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

காட்டு தீயில் ஏராளமான உயிரினங்கள் தீக்கு இரையான நிலையில், தீ காயங்களுடன் உயிர் பிழைத்த அவை முழுமையாக குணமடைந்து உயிர்வாழ்வது கேள்விக்குறியே.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் கலிபோர்னியா தொடங்கி அமேசான் வரை உலகின் பல்வேறு இடங்களில் இயற்கைக்கு மாறாக காட்டுத்தீ சம்பவங்கள்
தொடர்கின்றன.

இவை நவீன உலகில் இயற்கையை மறந்து போன மனிதர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக அமைந்துள்ளன.

பருவநிலை மாற்ற விவகாரத்தில், உலகநாடுகள் மற்றும் ஐ.நா. ஆகியவை இனி வரும் காலங்களிலாவது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற அபாய மணியை இந்த காட்டுத் தீ சம்பவங்கள் ஓங்கி ஒலிக்க செய்துள்ளன.Next Story

மேலும் செய்திகள்