ஈரான் படை தளபதி காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் உடல் டெஹ்ரான் நகருக்கு கொண்டு வரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
x
அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் உடல் டெஹ்ரான் நகருக்கு கொண்டு வரப்பட்டு  மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில்  பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு துக்கம் அனுசரித்தனர். அப்போது பேசிய தளபதி காசிம் சுலைமானியின் மகள், தனது தந்தை கொல்லப்பட்ட நாள் அமெரிக்காவுக்கு கருப்புநாள் என்று எச்சரித்தார்.  காசிம் சுலைமானியின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில்  ஈரானின் மதகுரு தலைவரான அயோத்துல்லா ‌கோமேனி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. 

Next Story

மேலும் செய்திகள்