சூடானில் 29 பேருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் அதிரடி

சூடானில் போராட்டக்காரர் ஒருவரை சிறையில் கொடுமைப்படுத்தி கொன்ற வழக்கில் 29 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சூடானில் 29 பேருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் அதிரடி
x
சூடானில் போராட்டக்காரர் ஒருவரை சிறையில் கொடுமைப்படுத்தி கொன்ற வழக்கில் 29 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சூடானில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தில், பள்ளி ஆசிரியர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் ஜனவரியில் கைது செய்யப்பட்டு, சிறையில் கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புலனாய்வு ஏஜெண்டுகளான 29 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்