ஆஸ்திரேலியா : மெல்ஃபோர்ன் நகரை வந்தடைந்த காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவின் தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்த காட்டுத் தீயின் தாக்கம், தற்போது மெல்ஃபோர்ன் நகரை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா : மெல்ஃபோர்ன் நகரை வந்தடைந்த காட்டுத் தீ
x
காட்டுத் தீயின் தாக்கத்தை தொடர்ந்து மெல்ஃபோர்ன் புறநகர் பகுதியை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். 75 ஏக்கர் பரப்பில் பற்றிய தீயை அணைக்க முயன்ற தன்னார்வ தீயணைப்பு ஆர்வலர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். பண்டோராவில் உள்ள 2 பல்கலைக் கழகங்களில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக விக்டோரியா தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டுத் தீக்கு பல வீடுகள் தீக்கிரையாகி வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் குண்டுகளை வீசி, தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்