லாகூர்: மருத்துவமனையை சூறையாடிய வழக்கறிஞர்கள் - வழக்கறிஞரை, மருத்துவர் தாக்கியதாக புகார்

பாகிஸ்தானின் லாகூரில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதால் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.
லாகூர்: மருத்துவமனையை சூறையாடிய வழக்கறிஞர்கள் - வழக்கறிஞரை, மருத்துவர் தாக்கியதாக புகார்
x
லாகூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வரிசையில் நிற்க மறுத்த வழக்கறிஞர் ஒருவரை, மருத்துவர்கள் தாக்கி உள்ளனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் சிலர் மருத்துவமனையின் ஜன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களில் சிலரை கைது செய்தனர். முன்னதாக போலீசார் மீதும் வழக்கறிஞர்கள் கற்களை வீசி தாக்கியதால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்