சர்வதேச மனித உரிமைகள் தினம் : இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இலங்கை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் : இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
x
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இலங்கை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்போர் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னரும், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை.  இதுதொடர்பாக, அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில்,  தமிழர்களின் அரசியல் விருப்பத்தை அறிய, ஐ.நா. சபையின் கீழ் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்