இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்: போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை பெறுவார் என கணிப்பு

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் போரிஸ் ஜான்சன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்: போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை பெறுவார் என கணிப்பு
x
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 320 இடங்கள் தேவை என்கிற நிலையில் போரின் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு 339 கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.  எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 231 இடங்கள் கிடைக்கும் என்றும் இதர கட்சிகளின் வாக்கு சதவீதம் 23 சதவீதமாக இருக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமையவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து,  போரீஸ் ஜான்சன் பதவி விலகியதுடன் திடீர் தேர்தல் நடத்தவும் நாடாளுமன்றம் முடிவு செய்தது.

Next Story

மேலும் செய்திகள்