சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 18 இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடான் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழப்பு
x
சூடானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 18 இந்தியர்கள் உயிரிழந்ததாக  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உடல் கருகிய நிலையில் இருப்பதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சூடான் தலைநகர் கார்டோமின் பாஹ்ரில், செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது, ஏதோ குண்டு வெடிப்பு நிகழ்ந்து விட்டதாக எண்ணிய சில தொழிலாளர்கள், அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர். அதற்குள் தீ  மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியதால், அதில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 130-க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்