லண்டன் மேம்பாலத்தில் தீவிரவாத தாக்குதல்

லண்டனில் தீவிரவாதி ஒருவர் பொதுமக்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
லண்டன் மேம்பாலத்தில் தீவிரவாத தாக்குதல்
x
லண்டனில் தீவிரவாதி ஒருவர் பொதுமக்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. புகழ் பெற்ற லண்டன் மேம்பாலம் அருகே நடந்து சென்றவர்கள் மீது திடீரென மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் , மர்ம நபரை சுட்டு கொலை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் மர்ம நபரின் பெயர் உஸ்மான் கான் என்பதும், கடந்த 2012ஆம் ஆண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்று 2018 ஆம் ஆண்டு வெளியே வந்தவர் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் உஸ்மான் கான் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தி வரும் போலீசார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்