பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் கின்னஸ் சாதனை
பதிவு : நவம்பர் 29, 2019, 03:53 AM
சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். அமீரகத்தில் இருந்து ஹசா அல் மன்சூரி முதல் முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து விண்வெளித்துறையில் அமீரகம் காட்டி வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், அமீரகத்தின் 48 வது  தேசிய தினத்தை முன்னிட்டும், பிரமாண்ட மனித ராக்கெட் உருவாக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 11ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து இந்த ராக்கெட் உருவத்தை த‌த்ரூபமாக உருவாக்கினர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

கிலோ ரூ.40-க்கு விற்பனையாகும் பெரிய வெங்காயம் - பண்ணை பசுமை கடைகளை நாடும் மக்கள்

கடந்த 17 நாட்களில் மட்டும் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் சுமார் 20 டன் அளவிற்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

8 views

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கு : சென்னை மாநகராட்சிக்கு ரூ.25,000 அபராதம்

விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

விவசாய திட்டங்கள் குறித்து 2 நாட்களில் விவரங்களையும் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு

மகாராஷ்டிராவில் மத்திய, மாநில அரசுகளின் விவசாய திட்டங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

6 views

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இட விவகாரம்: "இரு தரப்புக்கும் பாதகம் இல்லாமல் தீர்வு" - இயக்குனர் பாரதிராஜா நம்பிக்கை

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடையேயான பிரச்சினையில் இருதரப்புக்கும் பாதகம் இல்லாமல் தீர்வு காணப்படும் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

3 views

தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் - நித்யானந்தா

தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக நித்யானந்தா கூறியுள்ளார்.

106 views

வெளிநாட்டவர்களை குறிவைக்கிறாரா நித்தியானந்தா..?

இன்று என்ன புது புகார் என செய்திகளை தேடும் அளவிற்கு நித்யானந்தா மீதான சர்ச்சைகள் தினம் தினம் அணிவகுத்து நிற்கிறது. அதிலும் குறிப்பாக அவரது ஆசிரமத்தில் நிர்வாகிகளாக இருந்த வெளிநாட்டவர்கள் அடுத்தடுத்து அவர் மீது பகீர் புகார்களை எழுப்பி வருவது பரபரப்பின் உச்சமாக உள்ளது

120 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.