இலங்கை அதிபர் தேர்தல் : ஏற்பாடுகள் தீவிரம்

இலங்கையில் அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு சீட்டுகள் மற்றும் பெட்டிகள், வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
இலங்கை அதிபர் தேர்தல் : ஏற்பாடுகள் தீவிரம்
x
இலங்கையில், நாளை நடைபெறும் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டிகள், அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. ஒருகோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், 12 ஆயிரத்து 815 வாக்குச் சாவடிகளில், காலை 7 மணி முதல்,  மாலை 5 மணி வரை வாக்களிக்க உள்ளனர். தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அனுமதித்துள்ள அடையாள அட்டைகளை காட்டி, வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க மனித உரிமை அமைப்பு, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, பூட்டான் நாட்டு உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு, கம்பகா, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் இந்தக் கண்காணிப்பாளர்கள் பணியாற்ற உள்ளனர். குறித்த மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்