இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி தேர்தல் : அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்

இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி தேர்தல் : அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம்
x
இங்கிலாந்தில் டிசம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சாமர்சாட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன், அங்குள்ள ஒரு பள்ளிக்கு சென்றார். அப்போது, குழந்தைகளுடன் முயல்குட்டியை வைத்து விளையாடியதோடு, அவர்களின் ஓவியங்களையும் பார்த்து ரசித்தார். இதுபோல, ஸ்காட்லாண்டு பகுதியில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரொமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, மர்ம நபர் ஒருவர் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. யார்க் ஷையர் பகுதியில் 'பிரெக்சிட்' கட்சியின் தலைவர் நைகேல் பாரக், இசைக் கச்சேரியுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 



Next Story

மேலும் செய்திகள்