இஸ்லாமியர்களை எனக்கு எதிராக திருப்பினார் ரணில் - ராஜபக்ச குற்றச்சாட்டு

வரும் 16ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இஸ்லாமியர்களை எனக்கு எதிராக திருப்பினார் ரணில் - ராஜபக்ச குற்றச்சாட்டு
x
இலங்கை மத்திய மாகாணத்தில் பிரபல புத்த பிட்சுக்கள் மற்றும் இஸ்லாமிய குருமார்களை இணைத்து, உருவாக்கப்பட்டுள்ள 'பெருவாழ்க்கை' அமைப்பு சார்பில், கண்டியில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய  ராஜபச்சே, தமது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரத்தை பற்றி பேசுகிற, ஐக்கிய தேசியக் கட்சியினர், அண்மையில் நடைபெற்ற கிந்தோட்டை, அம்பாறையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி வாய்திறக்காதது ஏன்? எனக்  கேள்வி எழுப்பியுள்ளார். ஈஸ்டர் தின தீவிரவாத தாக்குதலில் இஸ்லாமியர்களே அதிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத ஒருவருக்கு, நாட்டின் தலைமைப்பதவி எதற்கு என்றும், சாடியுள்ளார். இஸ்லாமியர்களை தமக்கு எதிராக திசை திருப்பியது, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தான் என, ராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்