"பிரக்சிட் ஒப்பந்த சட்ட மசோதா தற்காலிக நிறுத்தம்" - பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவசரமாக நிறைவேற்றுவதற்கு எதிராகவும் அதிக எம்பிக்கள் வாக்களித்ததால் வரும் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
பிரக்சிட் ஒப்பந்த சட்ட மசோதா தற்காலிக நிறுத்தம் - பிரிட்டன் பிரதமர்
x
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில், அவசரமாக நிறைவேற்றுவதற்கு எதிராகவும் அதிக எம்பிக்கள் வாக்களித்ததால் வரும் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற, சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது தொடர்பான வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஒப்பந்தத்திற்கு முதல்முறையாக ஆதரவாக 329 பேரும், எதிராக 299 பேரும் வாக்களித்தனர். பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டிருக்கும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது. அதே நேரத்தில், குறிப்பிட்ட தேதிக்குள் அவசர அவசரமாக அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக நடைபெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 322 பேரும், எதிராக 308 பேரும் வாக்களித்தனர். இது அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் போரீஸ் ஜான்சனின் முயற்சிக்கு பின்னடைவாக அமைந்தது. அந்த ஒப்பந்தத்தின் அம்சங்களை ஆராய வேண்டி உள்ளதால், அதை குறுகிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற பிரிட்டன் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிப்பது தொடர்பான முடிவை ஐரோப்பிய யூனியன் எடுக்கும் வரை ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவை தனது அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போரீஸ் ஜான்சன் அறிவித்தார். இதனால், பிரக்சிட்  ஒப்பந்தம் வரும் அக்டோபர்  31க்குள் நிறைவேறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்