மெக்சிகோவில் சட்ட விரோதமாக குடியேறும் இந்தியர்கள் : 310 பேர் விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்

மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 300 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானத்தில் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மெக்சிகோவில் சட்ட விரோதமாக குடியேறும் இந்தியர்கள் : 310 பேர் விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்
x
மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 300 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானத்தில் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தெற்கு மேக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில்  இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாகவும், அவர்களில், ஒரு பெண், 300 ஆண்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 310 பேர் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய குடியுரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோவிற்கு செல்லும் இந்தியர்கள்  தரை வழியாக அமெரிக்காவிற்கு செல்லவதாக கூறப்படுகிறது. அதை தடுக்கும் வகையில், இருநாடும் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவர்கள்  இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்