"பேஸ்புக்கில்,அரசியல் சார்ந்த விளம்பரங்கள் தடை செய்யப்படும்"-தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு
சமூக வலைதளமான பேஸ்புக்கில் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் தடை செய்யப்படும் என்று அதன் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரக் கொள்கைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிபர் தேர்தல் தொடர்பாக சமூக வலை தளங்களில் பல மாறுபட்ட கருத்துக்கள் பதியப்பட்டதாகவும், அந்த பதிவுகள் மீது பேஸ்புக் நிறுவன நடவடிக்கை எடுக்கவில்லை என உலகம் முழுவதும் பல கருத்துக்கள் நிலவி வருவதாக கூறினார். இது போன்ற விமர்சனங்களால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறிய மார்க் அரசியல் சார்ந்த விளம்பங்கள் தடை செய்யப்பட்டால் தங்கள் நிறுவனத்திற்கு 5 சதவீதம் வருவாய் குறையும் என்று கூறினார்.
Next Story