"சரணடைந்த விடுதலை புலிகள் விடுவிக்கப்பட்டனர்" - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பேச்சு

ராணுவத்திடம் சரணடைந்த விடுதலை புலிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக, இலங்கை முன்னாள் அதிபர், ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
சரணடைந்த விடுதலை புலிகள் விடுவிக்கப்பட்டனர் - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பேச்சு
x
ராணுவத்திடம் சரணடைந்த  விடுதலை புலிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக, இலங்கை முன்னாள் அதிபர், ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுத்தத்தினால் பாதிக்கபட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், நாட்டின் ஏனைய பகுதிகளை விட பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறினார்.  தான் மீண்டும் அதிபரானால், அந்த பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.  அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக,ராஜபக்ச தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்