பிரிட்டன் இளவரசர் வில்லியம் பாகிஸ்தான் வருகை

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும், 5 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
பிரிட்டன் இளவரசர் வில்லியம் பாகிஸ்தான் வருகை
x
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும், 5 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளனர். இருவரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை சந்தித்து பேசினார். அப்போது, இளவரசி கேட், பாகிஸ்தானின் பாரம்பரிய சல்வார் கமீஸ் உடை அணிந்திருந்தது, அந்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதைதொடர்ந்து, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும், அரசு பள்ளிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பாகிஸ்தான் வருகை, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்