சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான புக்கர் விருது அறிவிப்பு

ஆண்டுதோறும் உலகளவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு புக்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான புக்கர் விருது அறிவிப்பு
x
ஆண்டுதோறும் உலகளவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு புக்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான புக்கர் விருது, கனடா நாட்டு எழுத்தாளர் மார்கரேட் அட்வூட் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர் பெர்னார்டின் எவாரிஸ்டோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் கனடாவை சேர்ந்த எழுத்தாளர் மார்க்கரேட் அட்வூட், எழுதிய "தி டெஸ்டமெண்ட்ஸ்" என்ற நூலும், பெர்னாரிடின் எவாரிஸ்டோ எழுதிய "கேர்ள், உமன், அதர்" என்ற நூலும் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுத்தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்