இலங்கை அதிபர் வேட்பாளராக சிவாஜிலிங்கம் மனு தாக்கல்
பதிவு : அக்டோபர் 07, 2019, 03:37 PM
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட சிவாஜிலிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்
டெலோ கட்சியின் உறுப்பினரான சிவாஜி லிங்கம் இலங்கை தேர்தல் ஆணையத்தில் அதிபர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதற்கான டெபாசிட் தொகையை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதர் செலுத்தினார். சிவாஜிலிங்கம் ஏற்கனவே  2 ஆயிரத்து 10 ஆம் ஆண்டு  ஒரு முறை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது  எதிர்ப்பை பதிவு செய்யவே  அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை செலுத்தி உள்ளனர். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் 41 பேர் போட்டியிடுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா உறுதியாக போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11837 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

363 views

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ

டெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

41 views

பிற செய்திகள்

"டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் திமுக களமிறங்கி உள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் நடவடிக்கையில், திமுக களமிறங்கி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5 views

வார்டு பொறுப்பு குழு உறுப்பினர்கள் பட்டியல் - மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க அறிவுறுத்தல்

வார்டு பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பட்டியலை நவம்பர் 5ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க அறிவுறுத்தியுள்ளது.

21 views

"மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் மத்திய அரசு" - பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு

நாட்டின், அரசியல் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை மத்திய அரசு செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.

20 views

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் : வாக்குச்சாவடிக்குள் பகுஜன் சமாஜ் நிர்வாகி கலாட்டா

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, தானே நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் ரகளையில் ஈடுபட்டார்.

31 views

தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் சர்ச்சை பேச்சு

திருச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

9168 views

தீபாவளி - ரூ.360 கோடி மது விற்பனைக்கு இலக்கு? - அமைச்சர் தங்கமணி மறுப்பு

தீபாவளி பண்டிகைக்கு 360 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று மின்துறை அமைச்சர் த​ங்கமணி தெரிவித்துள்ளார்.

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.