யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை - செப். 16 முதல் துவக்க திட்டம், இலங்கை அனுமதி

இந்தியாவில் இருந்து, யாழ்பாணம் நகருக்கு நேரடி விமான சேவை தொடங்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை - செப். 16 முதல் துவக்க திட்டம்,  இலங்கை அனுமதி
x
உள்நாட்டு போரின் காரணமாக யாழ்பாணத்தின் பலாலி விமான நிலையத்துக்கான பயணிகள் சேவையை இலங்கை  விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியது.  இந்த நிலையில் தற்போது  பயணிகள் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. பலாலியில் இருந்து  இந்தியாவின் புதுடெல்லி, மும்பை, கொச்சின் நகரங்களுக்கு நேரடி விமான சேவை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இது தொடர்பாக மதிப்பீடு செய்வதற்கு இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழு விரைவில் வர உள்ளதாக இலங்கை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலாலி விமான நிலையத்தை இந்திய நிதி உதவியுடன்  மேம்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போதுவரை அதிகாரபூர்வமான எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளவில்லை என்றும் இலங்கை அதிகாரிகள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்