பஹாமஸை பதம் பார்த்த "டோரியான்" - 30 பேர் பலி

பஹாமஸை பதம் பார்த்த டோரியான் புயல், தற்போது அமெரிக்காவையும் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது.
பஹாமஸை பதம் பார்த்த டோரியான் - 30 பேர் பலி
x
பஹாமஸை பதம் பார்த்த டோரியான் புயல், தற்போது அமெரிக்காவையும் கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. பஹாமஸ் நாட்டை கடந்த வாரம் தாக்கிய டோரியான் புயல், தற்போது நகர்ந்து அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த வார இறுதியில் புயல் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பஹாமாஸ் நாட்டில் இந்த புயலால் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கரோலினா மாகாண சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதுவரை புயல், வெள்ளம் காரணமாக 9 லட்சம் பேரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

காற்றாடி அலைச்சறுக்கு - வீரர்கள் உற்சாகம்

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடும் மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளி தாக்குவற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கரோலினா கடற்கரை பகுதியில் சிலர் காற்றாடி அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்