"பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்" - அமைதி பேச்சுவார்த்தையில் தலிபான்கள் உறுதி

ஆப்கானிஸ்தானில் உள்ள மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
பள்ளிகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் - அமைதி பேச்சுவார்த்தையில் தலிபான்கள் உறுதி
x
ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வரும் முயற்சியில், அந்நாட்டு அரசும், அமெரிக்காவும் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கத்தார் நாட்டின் தோஹாவில்,  ஆப்கன் மதத்தலைவர்கள், தலிபான் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது, ஆப்கனில் இருந்து, அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவது,  பெண்களுக்கான உரிமைகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, இரு தரப்பும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என, பேச்சுவார்த்தையில் தலிபான்கள் உறுதியளித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், ஆப்கனில் அமைதி நிலவி பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்