சூரிச் : சுவிஸ் வங்கிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது

சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் சுவிஸ் வங்கிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
சூரிச் : சுவிஸ் வங்கிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கைது
x
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில்  சுவிஸ் வங்கிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். கரியமில வாயுவை அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை கையாளும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வ​தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்திய நிலையில், அவர்களை கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்ததாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்