"போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு" - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு

போதைப் பொருட்கள் விற்பனை மூலம்தான் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வருமானம் வந்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு - விடுதலைப் புலிகள் மீது இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
x
போதைப் பொருட்கள் விற்பனை மூலம்தான் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வருமானம் வந்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பு நகரில் நடைபெற்ற தேசிய போதை பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தொடர்பு இருந்ததாகவும் , அதன் மூலம் வந்த வருமானத்தில்தான் பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கியதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாகவும் சிறிசேன தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்