இத்தாலியில் பயணிகள் படகு மீது, மோதியது சொகுசு கப்பல்

இத்தாலியில், பயணிகள் படகு மீது பெரிய சொகுசு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பேர் காயமடைந்தனர்.
இத்தாலியில் பயணிகள் படகு மீது, மோதியது சொகுசு கப்பல்
x
இத்தாலியில், பயணிகள் படகு மீது பெரிய சொகுசு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், 4 பேர் காயமடைந்தனர். வெனிஸ் நகரத்தின் கியுடெக்கா (Giudecca) கால்வாயை நோக்கி, 2 ஆயிரத்து 679 பயணிகளுடன்  275 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்ட பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தது. அப்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கட்டுப்பாடை இழந்த அந்த கப்பல், அந்த பகுதியில் இருந்த பயணிகள் படகில் மோதியது. பின்னர், கப்பல் நிறுத்தும் இடத்தின் தடுப்பில் மோதி, சொகுசு கப்பல் நின்றது. இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்