3 இடங்களில் குண்டு வெடிப்பு - நால்வர் பலி
நேபாள நாட்டில், மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர்.
நேபாள நாட்டில், மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில், இந்த சம்பவம் நடந்துள்ளது. காத்மாண்டுவின் முக்கிய குடியிருப்பு பகுதியில் ஒரு குண்டு வெடிப்பும், புறநகர் பகுதியில் 2 இடங்களிலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர். 7க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு, மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு, இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
Next Story