ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை : ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவு சார்பாக நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொண்டார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவு சார்பாக நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொண்டார். கிறிஸ்துவர்களின் ஒரு பிரிவினரான ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவர்கள், ஈஸ்டர் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வின் போது, ஜெருசலேமில் இயேசுவின் சமாதியில் புனித தீ உருவாவதாக நம்பப்படுகிறது. இந்த தீயானது ஜெருசலேமில் இருந்து, இங்கு கொண்டு வரப்பட்டு ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
Next Story

