குடிநீர் கிடைக்காமல் 200 கோடி பேர் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனம், யூனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல்

அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குடிநீர் கிடைக்காமல் 200 கோடி பேர் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனம், யூனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல்
x
அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக,  உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள யுனிசெப் அமைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், குடிநீர் பற்றாக்குறையால் சர்வதேச அளவில் மருத்துவமனைக்கு செல்லும் 15 சதவீதம் பேருக்கு  தொற்றுநோய் ஏற்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் பிறக்கும் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்ற நிலை அதிகம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்