போலீசிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற கார் : வெளியான தத்ரூப சேசிங் காட்சிகள்

அமெரிக்காவில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற கார், மற்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது. ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதைப் போல நடந்த இந்த சேசிங் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
போலீசிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற கார் : வெளியான தத்ரூப சேசிங் காட்சிகள்
x
கலிபோர்னியாவில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, அவர்களிடம் நிற்காமல் ஒரு கார் வேகமாக சென்றுள்ளது. உடனே போலீசாரும் அந்த காரை பின்தொடர்ந்தனர். இதனால் அதில் இருந்த மர்ம நபர், காரை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற அந்த கார், பின்னர் மற்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி ஒருவழியாக நின்றது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த பரபரப்பு சேசிங் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்